சிவானந்தா காலனியில் பா.ஜ.க சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ , மனசாட்சியின்படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

பெட்ரோல் ,டீசல் விலை  உயர்வை இரு முறை மத்திய அரசு குறைத்து இருக்கின்றது, பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்துள்ளன,பெட்ரோல்,டீசல் விலைகுறைப்பை பேசிய திமுக அதை செய்யாமல்  மக்களை ஏமாற்றி வருகின்றது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளது என்றார்.

மேலும், குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் என்ற வாக்குறுதி நிறைவேற்றபட வில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை இந்த அரசு நிறுத்தி விட்டது, சமூக பாதுகாப்பு திட்டங்களை இந்த அரசு  நிறுத்தி இருக்கின்றது. கோவையில் சாலைகள் மோசமாக இருக்கின்றது. முழுமையாக சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. ஸ்மார்ட் சிட்டி  பணிகள் வேகப்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.