விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமணம் இன்று நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருமே நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்கள்.

‘காடன்’ படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், விரைவில் ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22-ம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று கூறினார்கள்.

இன்று (ஏப்ரல் 22) காலை முதலே இவர்களின் திருமணச் சடங்குகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டன. தற்போது விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருமே திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவருக்கும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

#vishnu vishal marriage