இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின்: நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து...
Author: Abdur Rahman (Abdur Rahman)
கேரளாவில் நீர்வழி சுரங்க பாதையில் ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த நீர்வழி சுரங்க பாதை தற்போது நாட்டிலே முதல் முறையாக ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளும் வகையில் சீரமைக்கப்பட்டு உள்ளது. அதனை முதலமைச்சர் பினராயி விஜயன் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த புதிய சிலாக்கூர் நீர் வழி சுரங்க...
இந்தியாவின் ஏ.ஐ. உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனை: பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ....
அவதூறு வழக்கில் ஆஜரான ராகுல் காந்தி: மார்ச்.9- ஆம் தேதி அடுத்த விசாரணை
அவதூறு வழக்கின் விசாரணைக்காக உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரானார். ராகுல் காந்தி நேற்று காலை 10.40 மணியளவில் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து காலை 11.15 மணியளவில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து, ரேபரேலியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவரின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா...
பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பீகாரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. விசாரணை என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. குற்றவாளிகளை நிதிஷ் அரசானது பாதுகாக்கிறது. முதல்வர் அலட்சியமாக இருப்பது, துரதிருஷ்டவசமானது. அவர் பாஜ கைப்பாவையாக மாறிவிட்டார்....
ராகுல் காந்தி கேள்வியை கண்டு பாஜக அரசு அஞ்சுவது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
“ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?” என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,“மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?. அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற...
பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை: பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சீன ஆக்கிரமிப்பு குறித்து கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் ஆளும் கட்சியினர் தடுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் உள்ள எல்லைப் பிரச்னை குறித்து ராகுல் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி அவைக்கு வரும் போது அவரிடம்...
கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி: தலைநகரத்தை பாஜக கைப்பற்றியது
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள...
திருவண்ணாமலையில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர் தாமு
திருவண்ணாமலையில் ஐமேத் அபாகஸ் சார்பில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கினார். திருவண்ணாமலை உள்பட 15 இடங்களில் இயங்கி வரும் ஐமேத் எனும் நிறுவனம் மாணவ-மாணவியர்களின் கணித திறனை மிக குறுகிய காலத்தில் மேம்படுத்திடும் வண்ணம் அபாகஸ் வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் திருவண்ணாமலை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட 8-வது மாவட்ட அளவிலான...
திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் ஏற்பட்டது: எம்எல்ஏ கோ.தளபதி
திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் உள்ளது என திமுக எம்எல்ஏ கோ.தளபதி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோ.தளபதி எம்எல்ஏ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையுமில்லை, ஒற்றுமையுடன் வாழ்கிறோம். ஃப்வ்வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். எனக்கு 72 வயதாகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் முதலில் விளக்கு ஏற்றினர்.பின்னர், கிராம மக்கள்...


