புதுடெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார். மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நாளை மறுத்தினம் தொடங்குகின்றன. இதில் பிரிக்ஸ் அமைப்பின் 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளின் தலைவர்கள் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த...
Author: Abdur Rahman (Abdur Rahman)
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி என அறிவிப்பு
இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப்.09) அறிவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.09) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு...
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம், சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானபோதே, பல்வேறு தரவுகளுடன் பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். பட்டினப்பாக்கம் மீனவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அரசாணை வெளியாகியிருக்கிறது. ஒரு சில நாள்களுக்கு முன்பு, தமிழக...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை இஸ்ரேலியகுடியேற்றப் பொருட்களுக்கு பிரிட்டன் தடை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தூதரக நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் இந்த புதிய தடையை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் எட் மிலிபாண்ட் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ‘’மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதால் ஏற்படும் அநீதியையும் துயரத்தையும் இனியும் வெறுமனே கண்டிப்பதுடன் பிரிட்டன் நிறுத்திக்கொள்ள...
கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு? ஈரான் ஊடகங்கள் பரபரப்பு தகவல்
கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தப்படுவதாக ஈரான் ஊடகங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானில் உள்ள தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், கார்க் தீவு அருகே ஏராளமான வெடிச்சத்தங்களை கேட்கப்பட்டதாகவும், தீவின் அருகே ஈரானின் டேங்கர் ஒன்றை அமெரிக்கா தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி ஈரான் அல்லது...
3 மணி நேரம் போராட்டம்: வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், வீனஸ் வில்லியம்ஸ்–செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் இறங்கினர். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இணைந்து விளையாடிய அவர்கள், பரபரப்பான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தனர். முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்ட்–சீன தைபேயின் ஹாவ்-சிங் சான் ஜோடியை எதிர்கொண்ட வில்லியம்ஸ் சகோதரிகள், முதல் செட்டை 3-6 என இழந்தனர். 2-வது செட்டில் கடுமையாகப் போராடி 7-6 (8-6) என கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தனர்....
குர்பாஸ் அதிரடி: ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. 14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள்...
சாதியின் பெயரை கேட்காமல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்: அன்புமணி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மக்களிடம் சாதியின் பெயரை கேட்டு பதிவு செய்யும் நடைமுறையை கைவிட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகள் பட்டியலை கணக்கெடுப்புக்கான செயலியில் இணைத்து, அதிலிருந்து சாதியின் பெயர் மற்றும் எண்ணை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓபிசி மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி பட்டியல்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ததாகவும்,...
மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: செப்.5 போராட்டத்தை திரும்பப் பெற்றது சிஜேபி
கடந்த ஜூலை 20 அன்று சிஜேபி நடத்திய போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக சிஜேபி அறிவித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை...
வாக்குத் திருட்டு ஆணையத்தின் ஒரே நோக்கம் பாஜக வெற்றி பெற வேண்டும்: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வாக்குத் திருட்டு ஆணையத்தின் ஒரே நோக்கம் எப்படியாவது பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதும், நாட்டின் ஜனநாயகம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுமே என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜகவும், அந்த வாக்கு திருட்டு ஆணையமும் தங்கள் உத்திகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இனியும் அவ்வாறே செய்வார்கள். அவர்களின் நோக்கம் இதுதான். எப்படியாவது பாஜக வெற்றிபெற வேண்டும், அதோடு, இந்தியாவின்...









