கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்​தவர்​கள் கடைபிடிக்​கும் 40 நாள் தவக்​காலம் சாம்​பல் புதன்​கிழமை​யுடன் நேற்று முதல் தொடங்​கியது. இதையொட்​டி, தேவால​யங்​களில் இன்று சிறப்பு ஆராதனை​கள் நடை​பெறும்.

ஏசு கிறிஸ்து சிலு​வை​யில் அறைந்து கொல்​லப்​பட்டு 3-ம் நாள் உயிர்த்​தெழுந்​த​தாக கிறிஸ்​தவர்​களின் புனித நூலான பைபிளில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஏசு உயிர்த்​தெழுந்த தினத்தை உலகெங்​கும் வாழும் கிறிஸ்​தவர்​கள் ஈஸ்​டர் பண்​டிகை​யாக கொண்​டாடு​கிறார்​கள்.

ஈஸ்​டர் பெரு​விழாவுக்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக​வும், அதன் முதல் நாள் சாம்​பல் புதன்​கிழமை​யாக​வும் அனுசரிக்​கப்​படும். இந்த 40 நாள் தவக்​காலத்​தில் கிறிஸ்​தவர்​கள் மீன், இறைச்​சி, முட்டை முதலான அசைவ உணவு​களை தவிர்த்து விடு​வார்​கள். அத்​துடன், வீடு​களில், திரு​மணம், புது​மனை புகு​விழா என எந்த வித​மான கொண்​டாட்ட நிகழ்​வு​களை​யும் நடத்த மாட்​டார்​கள்.

ஏசு​வின் சிலு​வைப்​பாடு​களை நினை​வு​கூறும் வண்​ணம் தவக்​காலத்​தின்​போது ஒவ்​வொரு வெள்​ளிக்​கிழமை​யும் கத்​தோலிக்க தேவால​யங்​களில் சிலு​வைப்​பாதை வழி​பாடு நடை​பெறும். அது​மட்​டுமின்​றி, ஒவ்​வொரு ஆலயத்​தில் இருந்​தும் இறைமக்​கள் ஒரு குழு​வாக சேர்ந்து முக்​கிய​மான ஆலயங்​களுக்கு திருப்​பயணம் மேற்​கொள்​வர்.

இந்த ஆண்டு ஈஸ்​டர் பண்​டிகை ஏப். 5-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. எனவே, அதற்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக அனுசரிக்​கப்​படும். அந்த வகை​யில், தவக்​காலம் சாம்​பல் புதன்​கிழமை​யுடன் இன்று (18-ம் தேதி) தொடங்​கு​கிறது. இதையொட்​டி, தேவால​யங்​களில் சிறப்பு திருப்​பலி​யும், சிறப்பு ஆராதனை​யும் நடை​பெறும்.

வழி​பாட்​டின்​போது, கடந்த ஆண்டு குருத்​தோலை ஞாயிறு அன்றுவழங்​கப்​பட்ட குருத்​தோலைகளை எரிப்​ப​தால் கிடைக்​கும் சாம்​பலை பாதிரி​யார்​கள் “மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய். மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய், மறவாதே” என்று சொல்லியவாறு இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு பூசுவார்கள்.