சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) தங்கம் கிராம், 14,725 ரூபாய்க்கும், சவரன், 1,17,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஆகஸ்ட் 28) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் குறைந்து, 14,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் சரிவடைந்து, 1,17,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலையில், தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் உயர்ந்து, 14,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து, 1,18,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
