புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (செப்.11) காலமானார். மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இந்த நிலையில் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியாக...
