பரத் ராக்ஸ்-2023 தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை-Educational Scholarship Award-2023 வழங்கும் விழா இனிதே நடைபெற்றது.

இதில் 100க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.நிறுவனத் தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் செயலாளர் மற்றும் நிர்வாக அலுவலர் திருமதி சுதா சுகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக V.நந்தகுமார் IRS, அன்பழகன் காவல் ஆய்வாளர் சென்னை பெருநகர காவல்,

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் துணைத் தலைவர் S துரைராஜ் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.