தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், சிறந்த படம் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளது ‘ஜெய் பீம்’.
சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் தயாரிப்பு நிறுவனமான 2டி சார்பில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. கடந்த 2021 நவம்பர் 2-ஆம் தேதி ஓடிடி மூலம் வெளியான திரைப்படம் இது. இதனை இயக்குநர் ஞானவேல் இயக்கி இருந்தார். நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், எம்.எஸ். பாஸ்கர் முதலானோர் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்தப் படம் வெளியானது முதலே பலரது கவனத்தை ஈர்த்தது. அதோடு பல்வேறு விருதுகளையும் குவித்து வந்தது. இந்நிலையில், தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது ‘ஜெய் பீம்’ திரைப்படம்.
சிறந்த படம் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் விருதை இந்தப் படம் வென்றுள்ளது. இதில் சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை நடிகர் மணிகண்டன் வென்றுள்ளார். அவர் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா மற்றும் விருதுகள் என்பது தனியார் அமைப்பு நடத்தும் நிகவாகும்.