சிறார்களுக்கான கோவாவாக்ஸ் தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் ரூ.900-லிருந்து ரூ.225 ஆகக் குறைத்துள்ளது.

மகாராஷ்டிராவின் புணே நகரில் அமைந்துள்ள சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது.

இது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப் படுகிறது. இந்நிறுவனம் சார்பில் தற்போது 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்காக கோவாவாக்ஸ் தடுப்பூசி தயா ரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, மத்திய அரசு கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக தொடங்கியுள்ள கோவின்இணையதளத்தில் கோவாவாக்ஸ் கடந்த 2-ம் தேதி சேர்க்கப்பட்டது. இதனிடையே, கோவாவாக்ஸ் தடுப்பூசி இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவாலா நேற்று முன்தினம் ட்விட்டரில் தெரிவித்தார்.