ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிரடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி, நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 200ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால், இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.