உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவை பெருமளவில் உறிஞ்சி சுற்றுசூழல் நலனுக்கு பெரிதும் உதவுகிறது. உலகத்தின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடு வேகமாக அழிந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் மழைக்காடுகளின் மையத்தில் உள்ள அமேசானாஸ் மாநிலம் முதல் முறையாக மற்ற மாநிலங்களை விட அதிக அழிவை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, இப்பகுதியில் 3,988 சதுர கிமீ (1,540 சதுர மைல்கள்) அழிக்கப்பட்டது என்று தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – இன்பே தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே மாதங்களில் இருந்த அழிவின் அளவை விட 10.6% அதிகமாகும். DETER-B இயற்கை குறித்தத் தரவுத் தொடர் 2015 ஆம் ஆண்டு தொகுக்கத் தொடங்கியதிலிருந்து இன்று வரையிலான அதிகபட்ச அழிவு  நிலையை பதிவிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் அழிவு மட்டுமே 5.5% உயர்ந்து 1,120 சதுர கி.மீ ஆக இருந்தது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச அழிவாக பதிவிடப்பட்டுள்ளது. அமேசானாஸ் மாநிலத் தலைநகர் மனாஸுக்கு மேற்கே சாலைக்கு அருகில் உள்ள காடுகள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளன .

Inpe தரவுகளின்படி, 15 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் அமேசானில் அதிக எண்ணிக்கையிலான தீ விபத்துகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தீ விபத்துகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணப்படுவதைக் காட்டிலும் குறைவானதே.அனால் இந்த ஆண்டு ஜூன் மாதமே பெரும் காடு இழப்பது பதிவாகியுள்ளது. இப்படியே போனால் அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் இழப்பு அதிகமாகும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

பொதுவாக, மரம் வெட்டுபவர்கள் மதிப்புமிக்க மரங்களை பிரித்தெடுத்த பிறகு, பண்ணையாளர்கள் மற்றும் நிலத்தை அபகரிப்பவர்கள் விவசாயத்திற்காக நிலத்தை சுத்தப்படுத்த தீ வைக்கின்றனர். இதனாலும் காட்டின் பெரும்பகுதி காணாமல் போகின்றது.

அந்த நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலே இந்த காட்டு அரசியலால் தான் மாறியது. இருப்பினும் காடுகளை வெட்டுபவர்களுக்கான தடை, காட்டை பாதுகாக்கும், மேம்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.