39 தமிழர்களும் திபெத்தில் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழ்நாடு அரசு தகவல்

39 தமிழர்களும் திபெத்தில் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழ்நாடு அரசு தகவல்

நேபாள பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா மற்றும் கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 103 பேரில், முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு ஏற்கெனவே தமிழகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாளை மறுநாள் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். டெல்லி வந்தடைந்ததும், 39 பேரில் 33 பேர் விமானம் மூலம் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.