மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு திரையுலகிலும் உள்ள முன்னணி நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.