அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய...
