ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது.

24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது. அஜித் குமாருடன் இணைந்து 4 பேர் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்றனர். அப்போது அஜித் குமார் இந்திய தேசிய கொடியுடன் ஏறி மேடையை அலங்கரித்தார்.

GT3 Pro-Am பிரிவில் 2வது இடம் பிடித்ததை அடுத்து போடியத்தை அலங்கரித்தது ரேஸர் AKவின் ‘அஜித் ரெடாண்ட் ரேஸிங்’ அணி. மேலும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 5வது இடமும், Constructors சாம்பியன்ஷிப்பில் 3வது இடமும் பிடித்து அதிரடி காண்பித்தது அஜித் அணி.

அண்மையில் லண்டனில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி 38வது பிடித்திருந்த நிலையில் தற்போது 2வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.