Tag: #tn

Home #tn
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
Post

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது,...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
Post

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 5 முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் கட்சி...

லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Post

லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்தவும், புதிய மையங்களை நிறுவவும் ரூ.12,300 கோடி முதலீட்டில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், புதிதாக நிறுவுவதற்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்காக,...

தமிழகத்தில் 180 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு
Post

தமிழகத்தில் 180 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

தமிழகத்தில், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில்...

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா
Post

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். அ.தி.​மு.க எம்.​எல்.​ஏ.க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட...