வீ தி லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை

வீ தி லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை

வீ த லீடர்ஸ் அமைப்பின் ஊடகம், பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், Aspire K. சுவாமிநாதனை, பொதுச் செயலாளர் – ஊடகம், பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்ற பொறுப்பில் நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது அமைப்பின் நோக்கங்கள், செயல்பாடுகள், சமூகப் பணிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தல், அமைப்பின் தகவல் தொடர்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், ஊடகங்கள் மற்றும் பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.

Aspire K. சுவாமிநாதனின் அனுபவம், தகவல் தொடர்புத் திறன் மற்றும் ஊடகத் துறையில் அவருக்குள்ள ஆழ்ந்த புரிதலின் மூலம், நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகளையும் குரலையும் மக்கள் மத்தியில் தெளிவாகவும் வலிமையாகவும் கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள Aspire K. சுவாமிநாதனுக்கு அமைப்பின் அனைத்து தலைவர்களும், களப்பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.