Tag: #mkstalin

Home #mkstalin
டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
Post

டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும் என டெல்லியில் போராடுபவர்கள் மீதான கைது நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் (அக்.10) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதியை இணைக்கும் பல்வேறு...

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக் கேலி: மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்
Post

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக் கேலி: மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்

தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து, உருவக் கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் திமுகவுக்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘’தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக...

மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்; யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது?: மு.க. ஸ்டாலின் கண்டனம்
Post

மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்; யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது?: மு.க. ஸ்டாலின் கண்டனம்

மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்; யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது? பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா...

கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது: அமைச்சர் ராஜ்மோகன்
Post

கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது: அமைச்சர் ராஜ்மோகன்

தி.மு.க. அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு ஏன் ஒரு இடம்கூட வழங்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் தயவில்தான் த.வெ.க. அரசு ஆட்சி அமைத்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து...

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
Post

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது,...

சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது: வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
Post

சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது: வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

மிசாவில் சிறையில் இருந்து எனக்கு பெரும் கொடுமைகள் நடந்தன, சிறையில் அடி வாங்கிய தழும்பு இப்போதும் இருக்கிறது. என் தாடை உடைந்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’சட்டப்பேரவை யில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது சிறை வரலாறு இருப்பதால், அதைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறையில் பல கொடுமைகள் நடந்தன....

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்
Post

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த திங்கள்கிழமை (செப். 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கியபோது முதல்வர் விஜய் மிசா குறித்துப் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சுட்டிக் காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார். முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும்...