காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீண் சக்ரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை இடையே தொடர்ந்து வரும் கருத்து மோதல், தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தினரும், காங்கிரஸ் கட்சியினரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால், அவர்தான் பிரதமராக வேண்டும் என்பதை கூட்டணிக் கட்சிகள்...
