அமைச்சர் நிர்மல்குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்

அமைச்சர் நிர்மல்குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்

மிசா தொடர்பாக முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் நிலை குறித்து அவர்கள் சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். மேலும், சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னையால் மக்கள் போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் அதனைக் கவனிக்காமல் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாக பேசும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக மிசா விவகாரத்தில் உண்மைக்கு மாறான கருத்துகளை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் கூட அமைச்சர் தனது போக்கை மாற்றி கொள்ளாமல் தெடர்ந்து திமுக தலைவர் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

இதனை கண்டித்து, சட்டப்பேரவை செயலாளரிடம் உரிமை மீறல் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ-க்கள் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “சட்டப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாக பேசுவது விதிமீறல் என்றும், சட்டமன்றத்தில் இல்லாத உறுப்பினர்களைப் பற்றியே எப்போது பார்த்தாலும் பேசி, திசை திருப்பும் அரசியலையே தவெக அமைச்சர்கள் செய்து வருகிறார்கள். மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே மனு அளித்துள்ளோம்.

உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், புகார் குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த அவர்கள், சட்டசபையில் தவறான தகவல்களை பகிர்ந்துகொள்வது விதிமீறல். சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேரவையில் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களைப் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.

 மேலும், செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ’’சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், சர்காரியா கமிஷன் என்ற புதைந்துபோன பொய்யைத் தூக்கிக் கொண்டு வந்து பேரவையில் முதல்வர் பேசியுள்ளார்” என்று குற்றஞ்சாட்டினார். அதே போல சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேரவையில் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பேசியுள்ளார். எனவே அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.