மாணவர் பாரதிதாசன் கல்விக் கட்டண விவகாரத்தில் திமுகதான் அரசியல் செய்கிறது. உண்மையில் திமுகதான் தலித் மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்ஐஆர் போட்டது திமுக அரசுதான்என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு குற்றஞ்சாட்டி உள்ளார். விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது. மாணவர் பாரதிதாசன் கோரிய முழு உதவித்தொகையும் விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசில் எப்படி...
