தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்தில் முதல்வர் விஜய் நேற்று (செப். 23) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகளும் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தொடர் மின்வெட்டால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக,...
Tag: #nirmalkumar
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
அமைச்சர் நிர்மல்குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்
மிசா தொடர்பாக முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் நிலை குறித்து அவர்கள் சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். மேலும், சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னையால் மக்கள் போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் அதனைக் கவனிக்காமல் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாக பேசும்...
காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் மின்சாரம் தட்டுப்பாடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை...



