அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’முதல்வர் விஜய் முன்னிலையில் (செப்.18) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசால்...
