ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியின் தயாரிப்புகள் பெரிய அடி வாங்கியுள்ளது., ஏனெனில் இந்திய அணியில் விராட் கோலி உட்பட சிலர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாயன்று ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்றினால் இங்கிலாந்துக்கு செல்லவில்லை என்று ஊடகங்கள் கூறின. ஆனால் 2 நாட்களில் அவர் இங்கிலாந்து செல்கிறார் என்று மாலையே மேலும் ஒரு செய்தி வந்தது. இதோடு, தற்போது சில நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆம், மாலத்தீவில் விடுமுறையில் இருந்து திரும்பிய பிறகு விராட்டும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டார், ஆனால் அவர் இப்போது குணமடைந்துவிட்டார்,” என்று பெயர் கூற விரும்பாத தகவலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

“ஜூன் 24 முதல் லெய்செஸ்டர்ஷயருக்கு எதிரான இந்தியாவின் சுற்றுப்பயண ஆட்டம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விரும்பியபடி தீவிரமாக இருக்காது, ஏனெனில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அதிக சுமை சேர்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளான்ர். அணியில் இன்னும் சிலருக்கு கோவிட் இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ”என்று அதே தகவலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஞாயிறன்றுதான் கோலியும் ரோஹித் சர்மாவும் ஷாப்பிங் சென்றனர் என்று ஒரு செய்தி கூறுகிறது, இத்தனை குழப்பங்களை ஊடகங்கள் எழுப்பினாலும் பிசிசிஐ இது தொடர்பாக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஸ்வின் சரியான நேரத்தில் குணமடையத் தவறினால், ஜெயந்த் யாதவ் காத்திருப்பில் வைக்கப்பட்டார். ஜெயந்த் யாதவ் பெங்களூரில் உள்ள என்.சி.ஏ. இருப்பினும் அவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது, ஆனால் இப்போது அஸ்வின் முழுமையாக குணமடைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில், அநேகமாக புதன் கிழமை அஸ்வின் இங்கிலாந்து செல்வார்.