வெளியாகாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் தன் மீது புகார் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதாவது ட்விட்டரில் ஒருவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தால் அதனை திருத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
ட்விட்டர் மற்றும் மஸ்க் தரப்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடக்கத்தில் நிறுவனத்தை விற்க ட்விட்டர் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் விரும்பவில்லை. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் ட்விட்டர் மற்றும் மஸ்க் இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. வெளியிடப்படாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் தன் மீது புகார் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘ட்விட்டர் சட்டக்குழுவினர் என்னை தொடர்பு கொண்டார்கள். தனிப்பட்ட முறையில் வெளியிடப்படாத ஒப்பந்தத்தின் தகவல்களை நான் வெளிப்படுத்தியுள்ளதாக புகார் கூறினர். கட்டுப்பாட்டு பயனாளர்களின் மாதிரி அளவு 100 என்பதை வெளிப்படுத்தி விட்டதாக கூறினர்.