Author: Subash R (Subash R)

Home Subash R
ஆஷஸ் முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்: 9 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்
Post

ஆஷஸ் முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்: 9 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்

இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று (நவ.21) தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172...

விஜய் நடித்துள்ள “ஜன நாயகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு
Post

விஜய் நடித்துள்ள “ஜன நாயகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும்...

“GOAT” படத்தில் இயக்குநர் இழிவுப்படுத்தினார்: நடிகை திவ்யபாரதி
Post

“GOAT” படத்தில் இயக்குநர் இழிவுப்படுத்தினார்: நடிகை திவ்யபாரதி

ஜி.வி.பிரகாஷுடன் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான “GOAT”-ல் நடித்தபோது தான் அனுபவித்த கசப்பான தருணங்களை நடிகை திவ்யபாரதி பகிர்ந்துள்ளார். GOAT படப்பிடிப்பின்போது இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகரான சுடிகாலி சுதீர் ஏன் அமைதியாக...

Post

ரோஜர் ஃபெடரருக்கு “ஹால் ஆஃப் ஃபேம்’ கௌரவம்

சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர், ‘இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்’-இல் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அமெரிக்காவின் ரோட் ஐலேண்டில் உள்ள இந்த அமைப்பானது, டென்னிஸ் விளையாட்டுக்கு சிறப்பாக பங்களித்தோரை கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலுக்கு ஃபெடரர் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர், இந்த ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்தில் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுவார். கடந்த 2022-இல் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்ற ஃபெடரர், அந்த விளையாட்டின்...

Post

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா...

Post

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன்...

Post

2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய...

Post

100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்

அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி...

Post

சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த...

Post

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது....