நியூசிலாந்து அணி அறிவிப்பு: கம்பேக் கொடுத்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணி அறிவிப்பு: கம்பேக் கொடுத்த கேன் வில்லியம்சன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.

இதனையடுத்து, இரண்டு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த தொடரின் முதல் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லதாம் தலைமையிலான அந்த அணியில் வில்லியம்சன், கான்வே, மேட் ஹென்றி, வில் யங், டாம் பிளண்டெல், மிக்கேல் பிரெஸ்வெல், ஜேக்கப் டபி, சக்காடி பவுல்க்ஸ், டேரில் மிச்செல், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், சாண்ட்னர், டிக்னர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.