சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.
இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து விட்டு அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
மேலும் சென்னை அணியில் இருந்து பல வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதனால் எந்த வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவுள்ளது என்ற ஆவல் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சீசனில் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. குறிப்பாக சென்னையில் விளையாடி நிறைய போட்டிகள் தோல்வியடைந்தது.
இதனால் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஐபிஎல் சீசன் முடிந்த உடனே ஜூன் மாதம் இதற்கான வேலையை அணி நிர்வாகம் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச போட்டிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தை புதுபிக்க முதன்மை காரணம், உலகத் தரம் வாய்ந்த வடிகால் அமைப்பை நிறுவுதல், அவுட்ஃபீல்டை மாற்றுதல், பிட்ச் மற்றும் புல் மேற்பரப்பை மேம்படுத்துதல் ஆகும். இதனால் மழை பெய்த பிறகு விரைவாக விளையாட்டைத் தொடர அனுமதிக்கும் மற்றும் உயர்தர போட்டிகளை உறுதிப்படுத்தவும் ஆகும்.
இந்நிலையில் இந்த மைதானத்தை புதுபிக்க நடந்த வேலைகள் குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியன்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் வேலை தொடங்கியதில் இருந்து மைதானம் ரெடியாகும் வரை உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply