சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து...
Tag: IPL
ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி
‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ தொடரின் எட்டு அணிகளில், நான்கு அணிகளில் தற்போது இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சஞ்சீவ் கோயங்கா), எம்ஐ லண்டன் (மும்பை இந்தியன்ஸ் – அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்), சதர்ன் பிரேவ் (டெல்லி கேப்பிடல்ஸ் –...
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது....

