கல்கி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் சந்தித்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில், முன்னணி கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், பிரபாஸ் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து, கல்கி – 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது.

மேலும், தீபிகா படுகோன் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் இதில் நடிகர்கள் அமிதாப் பச்சனுக்கும் கமல் ஹாசனுக்கும் இடையேயான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
