கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்?: பிசிசிஐ விளக்கம்

கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்?: பிசிசிஐ விளக்கம்

2027 வரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக தொடருவார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும்.

சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்த மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார். இதனால் கம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.வி.எஸ். லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் இப்போதைக்கு நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- இப்போதைய சூழ்நிலையில் கம்பீருக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. அவர் அணியை மறுசீரமைப்பு செய்தவர். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை இருக்கிறது.

தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.