டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், போட்டியில் தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் நாட்டு மக்களிடம் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் விரும்புகிறோம்.

இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு உங்களை கற்றுக்கொள்ளவும், மாற்றியமைக்கவும், வளரவும் கற்றுக்கொடுக்கிறது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை. ஒரு வலுவான அணியாக கம்பேக் கொடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி என்று ரிஷப் பண்ட் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.