திருவண்ணாமலையில் பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் நிலமீட்பு கூட்டுயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சமி நில மீட்பு கூட்டுயக்கத்தின் சார்பில் ஆதிபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் த.சிவப்பிரகாஷ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.தமிழரசு தா.சிவதமிழன் பஞ்சமி நிலத்தை இழந்த ஆதிதிராவிடர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரவேண்டும் அதற்காக சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மனுமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
