ஆம்பூரில் பள்ளி மாணவிகள் கடத்தல் 3 பேர் போக்சோவில் கைது!

ஆம்பூரில் பள்ளி மாணவிகள் கடத்தல் 3 பேர் போக்சோவில் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பள்ளி மாணவிகள் மூவரை ஆசைவார்த்தை கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரில் உள்ள பள்ளியில் படித்து வந்த  மூன்று மாணவிகள் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

இதனைடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி கட்சிகளை வைத்து பள்ளிக்கொண்டா அருகே மூன்று மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர்.

Oplus_16908288

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின், ஆம்பூரைச் சேர்ந்த 18 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் அனான் , ஜலால் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து  17 வயது சிறுவன்  ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அனான் மற்றும் ஜலால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மூன்று மாணவிகளை மூன்று பேர் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.