இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கடத்தல் முயற்சியைத் தடுத்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயலுக்கான விருது ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 172 பயணிகள் மற்றும் விமானப்...
