வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடையே விவாதம் எழுந்துள்ள நிலையில், விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பணிகளில், தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வாக்காளர் பட்டியல்களை சரிபார்க்கவும், தேவையானவர்களிடம் உரிய விண்ணப்பங்களைப் பெறவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் சேவை இணையதளத்திலும் புதிய வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம், விவரங்களைத் திருத்துதல்...
