இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தளரான ஆனி எர்னாக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ளார். தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து உண்மையை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.