இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார்.

காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ் நிராகரித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல், டொனால்டு டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல் மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசிற்கான சாத்தியமான எதிர்கால பாதையை திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக நெதன்யாகு கருத்து தெரிவிக்கையில் “டிரம்பின் திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும். என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் அது காசாவை முழுமையாக ராணுவ மயமாக்குதல், ஆயுதக் குறைப்பு மற்றும் தீவிரமயமாக்கலை வலியுறுத்துகிறது” என்றார்.

அரசு சாரா ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குதலை சர்வதேச நிலைப்படுத்தல் படை உறுதிப்படுத்தும். இது சர்வதேச சட்டத்திற்கு இணங்க தனது ஆணையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்த படைக்கு அதிகாரம் அளிக்கிறது. ஐ.நா. மொழியில் இது ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதாகும். இந்த தீர்மானம் பாலஸ்தீன மக்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளின் அளவைப் பூர்த்தி செய்யவில்லை.

எந்தவொரு சர்வதேசப் படையும் ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவின் எல்லைகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன அமைப்புகளுடன் (institutions) பிரத்தியேகமாக செயல்பட வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன ஆணையம் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐ.நா. மற்ற அரசு நாடுகளுடன் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.