மேற்கு ஆசியாவில் நிலவும் போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

மேற்கு ஆசியாவில் நிலவும் போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிப்பதாகவும் பேச்சுவார்த்தை மூலமாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி,

“உலகில் நிலவும் பல்வேறு பதற்றங்கள் நிலவும் சூழ்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவே இருக்கிறது. அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு நாங்கள் எப்போதும் அழைப்பு விடுத்து வருகிறோம். மேலும், இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும்போது அமைதிக்கான குரல் இன்னும் வலுவடைகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது.

உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று கூறினார்.