அடுத்த ஆண்டு 4-ஆவது மகளீர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி விலை போகாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (நவ.27) டெல்லியில் நடைபெற்றது.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கும், சோபி எக்லெஸ்டோனை ரூ. 85 லட்சத்திற்கும், மெக் லானிங்கை ரூ. 1.9 கோடிக்கும் உபி வாரியர்ஸ் அணி வாங்கியுள்ளது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்ட அவர் ஏலத்தில் விலை போகவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply