பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை சம்யுக்தா பிரபலமானார். இதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் விஜய்யின் வாரிசு, காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
சம்யுக்தா குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் பிறந்தார். இந்த சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அனிருத்தா கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்த்தி வெங்கடேஷ் என்ற பெண்ணை திருமணம் செய்தார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.
இந்த நிலையில்தான் சம்யுக்தா, அனிருத்தா ஸ்ரீகாந்தை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார் என பரவலாக பேசப்பட்டது. மேலும், இருவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்யுக்தா அனிருத்தாவுக்கு நேற்று(நவ.27) திருமணம் நடைபெற்றது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது சம்யுக்தா – அனிருத்தா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply