அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு

அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசி ஏற்றுமதி 360 கோடி டாலரிலிருந்து 1,078 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

மாதாந்திர அடிப்படையில் ஏற்றுமதி குறைந்து வந்த நிலையில், அக்டோபரில் அது மீண்டும் உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஏப்ரலில் 165 கோடி டாலர், மே மாதம் 229 கோடி டாலர், ஜூனில் 199 கோடி டாலர், ஜூலையில் 152 கோடி டாலர், ஆகஸ்டில் 96 கோடி டாலர், செப்டம்பரில் 88 கோடி டாலராக அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசி ஏற்றுமதி இருந்தது.

ஓராண்டுக்கு முன்னர், இது கடந்த 2024 ஏப்ரலில் 66 கோடி டாலர், மே மாதம் 76 கோடி டாலர், ஜூனில் 59 கோடி டாலர், ஜூலையில் 49 கோடி டாலர், ஆகஸ்டில் 39 கோடி டாலர், செப்டம்பரில் 26 கோடி டாலராக அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசி ஏற்றுமதி இருந்தது.

இந்தியாவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான அறிதிறன் பேசி ஏற்றுமதி ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 49.35 சதவீதம் உயர்ந்து 1,595 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இது 1,068 கோடி டாலராக இருந்தது.

அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான அறிதிறன் பேசிகளின் மதிப்பு மே மாதம் 296 கோடி டாலர் (66.54 சதவீத வளர்ச்சி), ஜூன் மாதம் 268 கோடி டாலர் (66.61 சதவீதம்), செப்டம்பர் மாதம் 168 கோடி டாலர் (82.27 சதவீதம்) என இரு இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு காரணமாக நிச்சயமற்ற தன்மை நிலவியபோதும் மதிப்பீட்டு மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. உற்பத்தித் திறன் அதிகரிப்பு, அரசின் உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டம், உலக அறிதிறன் பேசி முன்னணி நிறுவனங்களின் தொடர் முதலீடு போன்றவற்றால் இது சாத்தியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.