கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்!

கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்!

தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்; சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து அவருக்கு சமன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, “ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு மடிப்பாக்கம் காவல் நிலையம் எப்படி சமன் அனுப்ப முடியும்?” என்ற கேள்வியை எழுப்பி, சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் மூலமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். சவுக்கு சங்கர் வீட்டிற்குள் இருந்து கதவை திறக்க மறுத்து, தனது வழக்கறிஞரை வரவழைத்து போலீசாரிடம் விளக்கம் கேட்டதாகவும், ஆனால் போலீசார் தரப்பில் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, போலீசார் வீட்டின் கதவை உடைத்து, அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்து பரிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், அறியப்படாத நபரின் தொலைப்பேசி எண்ணில் இருந்து ஜி பே மூலம் எனது பணியாளருக்கு பணம் அனுப்பி, கையாளாத அரசு, தன்னை கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்

சவுக்கு சங்கர் இல்லம் முன்பு போலீஸ் கைது நடவடிக்கையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published.