திருச்சி: ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ, அதை நாங்கள் செய்வோம்’’ என்று ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தெரிவித்தார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கல்வியாளர்கள், பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் அப்போது ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகியும், பாஜக மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, “திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழகத்தில்...
