திண்டுக்கல்: “2002-ல் இறந்தவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருந்துள்ளனர். இறந்தவர்களை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (டிச.27) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: திமுக ஆட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியான திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில்...
Author: Pomitha S (Pomitha S)
“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு
டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். 2024-ல் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான, பிரபல மாணவர் தலைவரும் இன்கிலாப் மன்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி (32), 2026 பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான டாக்கா-8 தொகுதியின் வேட்பாளராக இருந்தார். அவர் கடந்த டிசம்பர் 12ஆம்...
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: “முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும். அரசின் முடிவினை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்” என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தை முடித்துவைத்து வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம்...
“பட்டியலில் உங்கள் வாக்குகள் இல்லையெனில்…” உதயநிதி வேண்டுகோள்
சென்னை: “வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், படிவம் 6-ஐ வழங்கி, மீண்டும் விண்ணப்பியுங்கள்” என்று கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை கிழக்கு மாவட்டக் கழகம், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: “பல்வேறு முன்னெடுப்புகளால்தான் இன்றைக்குத் தமிழகம்...
உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் தினமும் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம் – பாஜக முதல்வர் உத்தரவு!
டெல்லி: உத்தரகாண்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கலாச்சாரம், வாழ்க்கை தத்துவங்களுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து, முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்க இந்த முயற்சி உதவும் என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக ஊடகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள பதிவில், “அரசுப் பள்ளிகளில் கீதையின் வசனங்களை ஓதுவதை எங்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த முயற்சி மாணவர்களை இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும்...
நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நூலகம்!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருப்பதாகவும், அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய...
“பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” – நடிகை மஞ்சு வாரியர் ஆதங்கம்!
திருவனந்தபுரம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்குநன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...
அமித் ஷா முதல் விஜய் வரை.. எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது!
திருவண்ணாமலை: “பிஹாரில் வென்றுவிட்டோம் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்கிறார் அமித் ஷா. இதுபோன்ற எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை,...
புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவாக செயல்பட்டு கொண்டிருந்த அமைப்பு இனி, அனைத்திந்திய அண்ணா...
தினசரி சந்தையை திறக்க கோரி தரையில் உருண்டு போராடிய முன்னாள் மேயர்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி,முன்னாள் மேயர் தலைமையில் வியாபாரிகள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி டவுன் பகுதியில் இயங்கிவந்த நேதாஜி போஸ் மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின்கீழ் இடித்து அகற்றப்பட்டு, ரூ.10.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இங்கு, 75 கடைகள் உள்ளன. கடைகளுக்கு சதுரஅடிக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டன. இதனால், 25 கடைகள் மட்டுமே ஏலம் போயின. இந்நிலையில், ஏலம் எடுக்கப்பட்ட கடைகளும் வாடகை அதிகம்...









