திண்டுக்கல்: அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், ஊமைத்துரையும் தங்கள்...
Category: தமிழகம்
“எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு பழனிசாமிக்கு உண்டு”!
சென்னை: “எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். ‘நான்தான் எல்லாம் செய்பவன்’ என்ற ‘God Complex’ அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?” என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10...
நல்லகண்ணுவை பார்க்க யாரும் வரவேண்டாம்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கட்சியினர், நண்பர்கள், பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
விபத்து நிகழ்ந்த உடனேயே அசல் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல், திருச்சி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பேருந்துகள் இயக்கியபோது விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து எங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை திரும்ப வழங்க உத்தரவிட...
‘‘ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’’ – மு.வீரபாண்டியன்
சென்னை: ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும். கடந்த 2009 ஜூன் 1-க்கு...
3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி திருமண...
இறந்தவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருந்துள்ளனர்!
திண்டுக்கல்: “2002-ல் இறந்தவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருந்துள்ளனர். இறந்தவர்களை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (டிச.27) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: திமுக ஆட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியான திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில்...
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: “முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும். அரசின் முடிவினை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்” என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தை முடித்துவைத்து வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம்...
நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நூலகம்!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருப்பதாகவும், அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய...
அமித் ஷா முதல் விஜய் வரை.. எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது!
திருவண்ணாமலை: “பிஹாரில் வென்றுவிட்டோம் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்கிறார் அமித் ஷா. இதுபோன்ற எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை,...









