இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி...
Category: இந்தியா
“திருப்பரங்குன்றம் தீப பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட வேண்டும்” – மோகன் பாகவத்
திருச்சி: ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ, அதை நாங்கள் செய்வோம்’’ என்று ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தெரிவித்தார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கல்வியாளர்கள், பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் அப்போது ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகியும், பாஜக மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, “திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழகத்தில்...
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள
அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி...
ஆஷஸ் 2-ஆவது டெஸ்டில் ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் விட்டுகொடுத்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் கடந்த மாதம் 'தீயவர் குலை நடுங்க' என்ற படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கங்கா...
எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து...
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை புகழ்ந்த பிரதமர் மோடி
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், எளிய விவசாய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளவர் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று , சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் தலைவராக இன்று தனது பணியை தொடங்கினார். அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், "குளிர்கால கூட்டத் தொடர்...
ஜக்தீப் தன்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுனா கார்கே: பாஜக கடும் எதிர்ப்பு
மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கருக்கு பிரிவுபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து மனம் வருந்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களவையின் புதிய தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், “மாநிலங்களவைத்...
பான் மசாலா போன்ற பொருட்களுக்கு புதிய வரி விதிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய...





