பாக்ஸ் சிலிக்கா என்​ற புதிய வகை​யான சர்​வ​தேச கூட்​டமைப்​பு; இந்தியாவுக்கு இடமில்லை

பாக்ஸ் சிலிக்கா என்​ற புதிய வகை​யான சர்​வ​தேச கூட்​டமைப்​பு; இந்தியாவுக்கு இடமில்லை

வாஷிங்டன்: நம்​பக​மான நட்பு நாடு​களு​டன் AI துறை​யில் ஆழமான ஒத்​துழைப்பை அதி​கரிக்க எட்டு நாடு​கள் அடங்​கிய ‘பாக்ஸ் சிலிக்​கா’ கூட்​டமைப்பை அமெரிக்கா உரு​வாக்​கி​யுள்​ளது. ஆனால், இதில் இந்​தி​யா​வுக்கு இடமில்லை என்ற தகவல் வெளி​யாகி உள்​ளது.

பாக்ஸ் சிலிக்கா என்​பது புதிய வகை​யான சர்​வ​தேச கூட்​டமைப்​பு. புதிய செயற்கை நுண்​ணறிவு யுகத்​தின் பொருளா​தார ஆற்​றலை வெளிக்​கொணர உலகின் மிக​வும் மேம்​பட்ட தொழில்​நுட்ப நிறு​வனங்​களைக் கொண்​டுள்ள எட்டு நாடு​கள், அமெரிக்கா தலை​மையி​லான இந்த கூட்​டமைப்​பில் இணைந்​துள்​ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளி​யுறவுத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: நம்​பக​மான நட்பு நாடு​களு​டன் ஆழமான ஒத்​துழைப்பை அடிப்​படை​யாகக் கொண்டு அமெரிக்கா தலை​மை​யில் இந்த கூட்​டமைப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதில், ஜப்​பான், தென் கொரி​யா, சிங்​கப்​பூர், நெதர்​லாந்​து, இங்கிலாந்து, இஸ்​ரேல், ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் ஆஸ்​திரேலியா ஆகிய நாடு​கள் இடம்​பெற்​றுள்​ளன.

சிலிக்​கான் நகரத்​துக்கு தேவை​யான தடை​யில்​லாத விநியோகச் சங்​கி​லியை உறுதி செய்​வதை இலக்​காகக் கொண்டு இந்த கூட்​டமைப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது; அதன்​படி, கட்​டாய சார்​பு​களை குறைத்​தல், செயற்கை நுண்​ணறி​வுக்கு (ஏஐ) அடிப்​படை​யான பொருட்​கள் மற்​றும் திறன்​களை பாது​காத்​தல் ஆகிய​வற்றை இந்த கூட்​டமைப்​பில் உள்ள நாடு​கள் தங்​களுக்​குள் உறுதி செய்​யும். இவ்​வாறு அந்த அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

ஜப்​பான், ஆஸ்​திரேலி​யா.. இருப்​பினும், அமெரிக்கா உரு​வாக்​கி​யுள்ள இந்த புதிய ஏஐ கூட்​டமைப்​பில் நெருங்​கிய நட்பு நாடாக கருதப்​படும் இந்​தி​யா​வுக்கு இடமளிக்​கப்படவில்​லை. இந்​தி​யா​வைத் தவிர, குவாட் அமைப்​பில் இடம்​பெற்​றுள்ள ஜப்​பான், ஆஸ்திரேலி​யா, அமெரிக்கா ஆகியவை இந்​த புதிய முன்​னெடுப்​​பான ​பாக்​ஸ்​ சிலிக்​​கான்​ கூட்​டமைப்​பில்​ உறுப்​பினர்​களாக உள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Leave a Reply

Your email address will not be published.