மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க. கோட்டைகளை கைப்பற்றி த.வெ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தமிழக மக்களுக்கு முழுமையான அர்ப்பணிப்புடனும் நன்றியுணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று தமிழக முதல்வரும் த.வெ.க. தலைவருமான விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 62,090 வாக்குகள் கிடைத்தன. தற்போது கட்சி மாறி த.வெ.க....
Tag: #ADMK
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி...
ரீல் முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி
கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரைப் பார்த்து பயமா? என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? மேக்கேதாட்டு அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு...
தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், ’’தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்னை. மானியக் கோரிக்கையிலும் பிரச்னை. அதனால் மக்கள் பிரச்னைகளை அவையில் முழுமையாகப் பேச...


